உணவுப் பாதுகாப்பு மற்றும் உலர் உணவு வழங்கி வைப்பு

உணவுப் பாதுகாப்பு மற்றும் உலர் உணவு வழங்கி வைப்பு

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை குறைக்கும் முகமாக திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனமானது நலிவுற்ற மக்களை இனங்கண்டு அவர்களுக்கான உளவியல் மற்றும் பௌதீகவியல் உதவிகளை செய்து வருகிறது.

கரிதாஸ் செடெக் நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி உதவியுடன் இந்நிகழ்வு நடைமுறைப்படுத்தப்பட்ட வருகிறது

அந்த வகையில் (2023.09.25) கும்புறுப்பிட்டி பிரதேசத்தில் காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சிரமதானம் 08:30 மணி வரை அருட்தந்தை அலன் தலைமையில் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த விவசாய நடவடிக்கை தொடர்பாக விவசாய போதன ஆசிரியர் திரு ஏ.எஸ்.எம். ஜெமீன் பொதுமக்களுக்கு எவ்வாறு ஒருங்கிணைந்த விவசாயத்தை செய்யலாம் அதன் சாதக பாதக விளைவுகள் மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்க புதிய யுக்திகளை எவ்வாறு கையாளலாம் என பல்வேறு அறிவு சார்ந்த விடயங்கள் புகட்டப்பட்டது.

அத்துடன் மக்களிடையே காணப்பட்ட சந்தேகங்களுக்கு உடனடியான பதில்களும் வளவாளரால் நிவர்த்தி செய்யப்பட்டதுடன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 52 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.

இதே போன்ற நிகழ்வு நிலாவெளி பாலர் பாடசாலையில் இடம்பெற்றதுடன் இங்கே 33 பயனாளர்கள் செயல் அமர்வில் கலந்து கொண்டதுடன். 48 வரிய குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட உலர் உணவு பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.

40 ஆண்டு காலமாக திருமலை மாவட்டத்தில் நலிவுற்ற மக்களை இனங்கண்டு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Food Security & Dry Ration Distribution

Reduce the economic crisis in the past, Trincomalee EHED Caritas has been identifying vulnerable people and providing psychological and physical support to them.

The event is being implemented under the guidance of Caritas SEDEC with the financial assistance of Caritas Australia

In that way (2023.09.25) in Kumburupitti area, which started at 7.00 am to 8.30am , Sramadana . under the leadership of Rev.Fr. Alan.

After that, regarding the integrated farming system, the agriculture Inspector Mr. A.S.M. Jemeen knowledge related topics

Also, immediate answers to the doubts found among the people were addressed by the developer and dry food packs. were also provided to 52 families affected by economic crisis.

A similar event was held at Nilaveli Preschool and 33 users participated in the activity session here. The second phase of dry food package was also distributed to 48 families.

For 40 years, Trincomalee district has been identifying vulnerable people and carrying out various awareness and economic development activities

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *