திருகோணமலை EHED Caritas நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில் எமது நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் போல் ரொபின்சன் அடிகளார் அவர்களின் தலைமையில் குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுபிட்டி, நிலாவளி, வேலூர் கிராமங்களுக்கான அடிப்படை தேவை தகவல் சேகரிப்பு விண்ணப்ப பத்திரம் பூர்த்தி செய்யப்பட்டது. இதில் இப்பிரதேசத்திற்கு பொறுப்பான பங்குத்தந்தை அருட்பணி அலன் அடிகளார் மற்றும் வளவாளராக திருமதி டி.கனிகா (Agronomist / DO) அவர்களும் கலந்து கொண்டனர். 127 க்கும் மேற்பட்ட பயனாளிகள் (கும்புறுப்பிட்டி – 71 நிலாவெளி – 56 ) இத்திட்டத்தில் கலந்து கொண்டதுடன் பொருளாதார நெருக்கடியால் தங்களின் வாழ்வாதாரம் பற்றிய சில அடிப்படை தேவைகளையும் நம்மிடம் கூறினர். இந்நிகழ்வின் போது வெளிநாட்டு பிரதிநிதிகளாக தொண்டர் பணி செய்வதற்காக எமது நிறுவனத்துடன் இணைந்து ஸ்பெயின் நாட்டு பல்கலைக்கழக 04 மாணவர்கள் இணைந்து கொண்டனர்.
Enhancing Food Security and Livelihood for Crisis-Affected Families in Sri Lanka
In this programme carried out by Trincomalee EHED Caritas, under the leadership of our Institute’s Director Rev Fr. Dr. B. Paul Robinson, the application role of basic needs information collection (Need Assessment) for Kumpurupitti, Nilavali and Vellor villages under Kuchaveli Pradeshiya Sabha was completed. Rev Fr. Allan, the parish priest in charge of this area and Ms. D. Kanishka (Agronomist / DO), as the resource person also participated in this. More than 127 beneficiaries participated (Kumpurupitty -71 , Nilaveli – 56 ) in this program and told us some basic needs of their livelihood due to economic crisis. During this event, Spanish university 04 students joined our Institution to volunteer as foreign representatives.